புதன், 5 ஜூன், 2013

காதலிச்ச பொண்ணே மனைவி?


ஜோசியர் : நீங்க காதலிச்ச பெண்ணே உங்களுக்கு மனைவியா வருவா!

காதலர் : இந்த தோஷத்துக்கு என்ன பரிகாரம் சுவாமி.

...........................

காதலன் : கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்

காதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

..................................

நர்ஸ் 1 : டாக்டர் ஏன் ஆறாம் நம்பர் ரூமையும், நூறாம் நம்பர் ரூமையும் ஆபரேஷன் செய்யற பேஷண்ட்டுகளுக்காக ஒதுக்கி வச்சுருக்கார்?

நர்ஸ் 2: ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்பதால் தான்!

.................

நண்பர் 1 : ஏண்டா என்னை முட்டாள்னு திட்டுனீயாமே?

நண்பர் 2 : போடா  லூசு.  யாரோ சொன்னதை நம்பறியா நீ?
அறிவு கெட்டவனே உன்னைப் போய் திட்டுவேனாடா?

..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக