திங்கள், 3 ஜூன், 2013

அந்த ரெண்டு வாழைப்பழம் என்னாச்சு?




ஒரு செல்வந்தர் இருந்தார். சிறந்த பக்திமான்.
ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை
ஒன்றை தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவனிடம்  கொடுத்து
அருகில் உள்ள கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

அந்த சிறுவன் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலையிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.
அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.

கனவில் இறைவன் வந்து நீ எனக்குக் கொடுத்த இரண்டு
பழங்களை நான் விரும்பி சாப்பிட்டேன்; ருசியாக இருந்தது என்றார்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது. ஒரு குலை பழம்
கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச்
சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்பட்டார்.

மறு நாள் காலை அந்தச் சிறுவனை  கூப்பிட்டு அந்த வாழைக்குலையில் எத்தனை பழத்தை கோவிலில் கொடுத்தாய் என்று கேட்டு மிரட்டினார்.

சிறுவன் பயத்தில் நான் பசியாக இருந்ததால் 2 பழங்களை சாப்பிட்டு விட்டு மீதியை தான் கோவிலில் கொடுத்ததாக உண்மையை ஒப்புக்கொண்டான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது.

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக