வெள்ளி, 10 மே, 2013

ரெய்னா 99க்கு காரணம் யார்?


சென்ற ஐபிஎல் மேட்ச்லே ரெய்னா 1 ரன்னில் சதம் மிஸ் பண்ணிட்டாரு. எல்லோரும் நினைச்சிட்டு இருப்போம். 20 ஓவர் முடிஞ்சிடுச்சிப்பா அவன் என்ன செய்வான்னு.

ஆனா உண்மையிலே ரெய்னா செஞ்சுரி மிஸ் பன்னினதுக்கு காரணமே நம்ம ஜடேஜா தான் அவன் கடைசி ஓவரில் 3 வது பந்தில் சிங்கிள் ரன் எடுத்திருக்கனும்.

அதை விட்டுட்டு ஒரு 4 + 1 சிங்கிள்னு 2 பால் வேஸ்ட் பன்னிட்டான். சென்னை ஒன்றும் இரண்டாவது பேட்டிங் செய்ய வில்லை. சேஸ் செய்ய அதிரடியாக ஆட நிர்பந்தம் இல்லை. ஏன்னா அப்பவே சென்னை 200 தாண்டி தான் ஆடிகிட்டிருக்கு அந்த ரன்னே போதும் ஜெயிக்க.

அதனால ஜடேஜா சிங்கிள் அடிச்சி ரெய்னாவுக்கு சான்ஸ் கொடுத்திருக்கனும்.

இப்படி அடுத்தவன் பொழப்ப கெடுக்க இது ஒன்னும் ஜடேஜாவுக்கு புதுசில்லை. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சச்சின் 95 ரன்னில் இருக்கும் போது எதிர்முனையில இருந்த ஜடேஜா தொடர்ச்சியாக பவுன்டரி அடிச்சு இந்தியாவ ஜெயிக்க வச்சிட்டான்.

அப்ப சச்சின் முகத்த பாக்கவே பாவமா இருந்துச்சு. ஜடேஜாவுக்கு நான் சொல்லிக்கிறதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்

நீ வீரனா? இல்லையானு டீம் தத்தளிச்சிட்டு இருக்கும் போது திறமைய காட்டு. அத விட்டுட்டு ஈஸியா ஜெயிக்கிற மேட்சில அடுத்தவன் பொழப்ப கெடுக்காத. ஓகே

2 கருத்துகள்: