பொண்டாட்டி தொல்லை தாங்கலடா.. பேசாம சாமியாராப்
போயிடலாமான்னு தோணுது...!
ஒரு பொம்பளைய சமாளிக்க முடியாத நீ எப்படிடா நாலைஞ்சு
பொம்பளைங்களை சமாளிக்கப் போறே..?
...............
என்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..?
ம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்
கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..!
...............
தொண்டன் 1 : எங்க தலைவர் பெரிய ஜமீன் பரம்பரை..!
தொண்டன் 2 : போடா.. எங்க தலைவர் பெரிய "ஜாமீன்" பரம்பரை..!
............................
நம்ம எம்.எல்.ஏ வை பொதுமக்கள் சேர்ந்து தாக்கிட்டாங்களாமே ..ஏன்..?
ரொம்பநாள் கழிச்சு தொகுதிக்குள்ள வந்தாரா..? மக்கள் அடையாளம் தெரியாம
புள்ள புடிக்கிறவன்னு நெனைச்சு பின்னி எடுத்துட்டாங்க..!
...................................
ஆபரேஷன் தியேட்டர்ல நர்ஸ் "வெற்றி..வெற்றின்னு கத்தறாங்களே..
பேஷண்ட் பொழைச்சுட்டாரா..?
இல்லே.. ஆபரேஷன் ஊத்திக்கும்ன்னு டாக்டர்கிட்ட நர்ஸ் பந்தயம்
கட்டினாங்களாம்..!
................................
சார்.. உங்க பத்திரிகையில் "மணவாழ்க்கையில் வெற்றிபெறுவது எப்படி..?"ன்னு
ஒரு தொடர் வந்துச்சே.. ஏன் திடீர்ன்னு நின்னுடிச்சு..?
அதை எழுதறவருக்கும் அவர் மனைவீக்கும் விவாகரத்து வழக்கு நடந்துட்டு இருக்கு.
முடிச்சுட்டு வந்து தொடர்ந்து எழுதுவார்..!
.........................
ஹா... ஹா... கலக்கல்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சார்
பதிலளிநீக்கு