செவ்வாய், 4 ஜூன், 2013

விமான விபத்தும் குரங்கும்

..




ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று.

ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..

அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..

அதிகாரி : விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?

குரங்கு :  சீட் பெல்ட் போட்டார்கள்..

அதிகாரி :  பணிப் பெண்கள்..?

குங்கு :  பெல்ட் போட உதவினார்கள்..

அதிகாரி :  விமானிகள்.. ?

குரங்கு :  விமானத்தை கிளப்பினார்கள்..

அதிகாரி :  நீ என்ன செய்தாய்..?

குரங்கு :  வேடிக்கை பார்த்தேன்..

அதிகாரி :  15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

குரங்கு :  பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்..

அதிகாரி :  நீ என்ன செய்தாய்..?

குரங்கு :  நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!

அதிகாரி :  விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?

குரங்கு :  பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..

அதிகாரி :  நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குரங்கு :  நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
_________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக