செவ்வாய், 28 மே, 2013

T.M.S. – பற்றிய சில அரிய செய்திகள்

.

T.M.S. பாடிய சில பாடல்களில் பாடகிகள் பாடாமல் ஹம்மிங் மட்டும் செய்தருப்பார்கள்.

ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய இவர், ஒரே ஒரு பாடலில் மட்டும், ஒரே ஒரு வரி மட்டும் பாடிவிட்டு, பாடல் முழுவதும் ஹம்மிங்செய்ய,

பாடல் முழுவதையும் சுசீலா பாடியிருப்பார். நாடோடி படத்தில் உள்ள “கண்களினால் காண்பதெல்லாம்” என்ற இப்பாடலில் இப்படியொரு சிறப்பம்சம்.

 வையம் போற்றும் சிறந்த பாடகரான T.M.S. “பலப் பரீட்சை” என்ற ஒரேயொரு படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும்
ஒரு அரிய நிகழ்வாகவுள்ளது.

1987 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட “உழவன் மகன்” என்ற படத்திற்காக, மனோஜ்-கியான் இசையமைப்பில், ஆபாவாணன் எழுதிய “மாலைக் கருக்கலிலே – தினம் உனைத் தேடும் தலைவன்” என்ற பாடலை சசிரேகாவுடன் இணைந்து பாடியுள்ளார்

T.M.S. 1989 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட “தாய் நாடு” என்ற படத்திற்காக, மனோஜ்-கியான் இசையமைப்பில், ஆபாவாணன் எழுதிய 5 பாடல்களை பாடியுள்ளார் T.M.S. இந்த இரு படங்கட்கு பின்பு இவர் வேறு படங்களில் பாடியதாக தெரியவில்லை.

இவரைப்போன்ற சிறந்த பாடகரான A.M.ராஜாவின் இசையமைப்பில் “உலகம் உறங்கும் வேளை” (வீட்டு மாப்பிள்ளை) ; “சத்தியமே துணையான் போது” (அன்புக்கு ஓர் அண்ணி) – ஆகிய இரு பாடல்களை T.M.S. பாடியுள்ளார். 

இன்றைய முதல்வர் (அம்மா) ஜெயலலிதாவுடன் இணைந்து; “ஓ மேரி தில்ரூபா” (சூரியகாந்தி), கண்களில் ஆயிரம் SWEET DREAM” (வந்தாளே மகராசி), “சித்திர மண்டபத்தில்” (அன்பைத்தேடி) ஆகிய 3 பாடல்களை T.M.S. பாடியுள்ளார்.

 பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய 3 படங்களில் நாயகனாகவும், தெய்வம் படத்தில் சிறு காட்சியிலும் இவர் நடித்துள்ளார். A.L.ராகவனுடன் இணைந்து கல்லும் கனியாகும் என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் T.M.S.

T.M.S. அவர்கள் சிவாஜி கணேசனுக்குத்தான் அதிக பாடல்களை பின்னணி பாடியுள்ளார். அடுத்து ஜெய்சங்கருக்கும், மூன்றாவதாக M.G.R.க்கும் பாடியுள்ளார். S.S,R., ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், A.V.M.ராஜன், முத்துராமன், சிவக்குமார் – போன்ற முன்னணி நாயக நடிகர்களுக்கும் கணிசமான அளவு பாடல்களை பாடியுள்ளார்.

1 கருத்து: